கால்பந்து உலகக் கோப்பையை நான்கு முறை வென்ற இத்தாலி அணி ஈரானுக்குப் பதிலாக 2026 உலகக் கோப்பையில் பங்கேற்க டிரம்ப் விடுத்த அழைப்பினை புறக்கணித்துள்ளது.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் ஜூனில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற இருக்கின்றன. இதில் ஈரான் விளையாட தேர்வாகியிருந்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அணி பங்கேற்பதை விரும்பாமல் இருக்கிறார்.
இந்த நிலையில், டிரம்ப்பின் உடனிருக்கும் அதிகாரிகள் உலகக் கோப்பையில் ஈரானுக்குப் பதிலாக கலந்துகொள்ளுமாறு இத்தாலியிடம் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து டிரம்பின் நண்பரும் உலகளாவிய கூட்டாண்மைகளுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதருமான பாலோ ஸாம்போலி, “எனது கோரிக்கை அரசியல் ரீதியானது அல்ல; ஈரான் ஒருவேளை கடைசி நேரத்தில் விளையாடாமல் சென்றால் அதற்கான திட்டம்தான். எனக்கு கனவு வந்தது. எனது கோரிக்கை இத்தாலிய மற்றும் இத்தாலிய - அமெரிக்க மக்களுக்கு மட்டுமே” என்றார்.
இந்தக் கோரிக்கைக்கு அந்த நாட்டின் விளையாட்டுதுறை அமைச்சர் ஆண்ட்ரியா அபோடி, “ முதலில் இதற்கு வாய்ப்பில்லை; இரண்டாவதாக இது நல்ல யோசனையும் அல்ல” எனக் கூறினார்.
கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த இத்தாலி அணியின் பயிற்சியாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். நான்கு முறை சாம்பியனான இத்தாலி தொடார்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெறாமல் சென்ற விரக்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஈரான் கால்பந்து அணி இந்த உலகக் கோப்பையில் நிச்சயமாகப் பங்கேற்கும் எனக் கூறிவரும் நிலையில் டிரம்ப்பின் ஆலோசனை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேல் ஆகிய பகுதிகளின் மீது ஈரான் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால், மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதாக, கடந்த மார்ச் 5ல் இத்தாலி நாட்டின் பிரதமர் மெலோனி அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Italy dismisses replacing Iran at the World Cup after suggestion by Trump official
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழாவில் நடனமாடும் பாகுபலி பட நடிகை!

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!

கால்பந்து உலகக் கோப்பை: 6 பெண்கள் உள்பட 170 நடுவர்கள் தேர்வு!

அரை நூற்றாண்டுக்குப் பின்னர் கால்பந்து உலகக் கோப்பையில் தேர்வான காங்கோ!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

