பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

891 புதிய வீரர்களுடன் முதல்முறையாக 1,248 பேர் பங்கேற்கும் கால்பந்து உலகக் கோப்பை!

ஃபிஃபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026க்கான அணிகள் குறித்து...

Football World Cup Poster

கால்பந்து உலகக் கோப்பை போஸ்டர். - படம்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை.

Published On :

ஃபிஃபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பைக்கான 48 அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்முறையாக 1,248 வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கிறார்கள்.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை தொடரும். இதில் மொத்தமாக 104 போட்டிகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகக் கோப்பையில் புதியதாக 891 வீரர்களும் கடந்த உலகக் கோப்பையில் விளையாடியவர்கள் 357 பேரும் இதில் பங்கேற்கவிருக்கிறார்கள்.

லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கில்யெர்மோ ஓச்சோவா தங்களது ஆறாவது உலகக் கோப்பையில் விளையாடவிருக்கிறார்கள்.

மூத்த வீரராக ஸ்காட்லாந்தின் கிரெய்க் கார்டன் (43 ஆண்டுகள் 162 நாள்கள்), இளம் வீரராக மெக்சிகோவின் கில்பெர்டோ மோரா (17 ஆண்டுகள் 240 நாள்கள்) பங்கேற்கிறார்கள். 20 வயதுக்கும் குறைவான 22 வீரர்களும் 40 வயதுக்கும் அதிகமான 7 வீரர்கள் விளையாடவிருக்கிறார்கள்.

இந்திய அணி இதுவரை கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வானதில்லை. இந்தப் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்ப ஜீ5 அனுமதி பெற்றுள்ளது.

போட்டியை நடத்தும் நாடுகள்: கனடா, மெக்சிகோ, அமெரிக்கா.

ஆசியா: ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், தென் கொரியா, கத்தார், சௌதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், இராக்.

ஆப்பிரிக்கா: அல்ஜீரியா, கபோ வெர்டே, காங்கோ, ஐவரி கோஸ்ட், எகிப்து, கானா, மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா.

வட, மத்திய அமெரிக்கா, கரீபியன்: குராசோ, ஹைதி, பனாமா.

தென் அமெரிக்கா: ஆர்ஜென்டீனா, பிரேசில், கொலம்பியா, ஈக்வாடர், பராகுவே, உருகுவே.

ஓசியானியா: நியூசிலாந்து.

ஐரோப்பா: ஆஸ்திரியா, பெல்ஜியம், போஸ்னியா & ஹெர்செகோவினா, குரோஷியா, செக், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, துருக்கி.

Summary

FIFA World Cup 2026 squads confirmed: 1,248 dreams, 48 teams and a truly global cast of players

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.