எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

எபோலா அச்சம்: காங்கோவின் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஸ்பெயின்!

காங்கோ கால்பந்து அணியின் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து...

News image

காங்கோ கால்பந்து அணியினர். - ஏபி

Updated On :10 ஜூன் 2026, 4:58 pm IST

ஸ்பெயினில் லா லினியா டி லா கான்செப்சியன் பகுதியில் நடைபெற இருந்த காங்கோ அணியின் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீலேவுக்கு எதிராக ஸ்பெயினில் விளையாடவிருந்த காங்கோ அணியின் இந்தப் போட்டி எபோலா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் 11ல் தொடங்கவிருக்கும் நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காங்கோ அணி உலகக் கோப்பையில் குரூப் கே பிரிவில் பங்கேற்கவிருக்கிறது. இதில் முதல் போட்டியில் போர்ச்சுகலுடன் ஜூன்17ஆம் தேதியும் கொலம்பியா, உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் முறையே ஜூன் 23, 27ஆம் தேதிகளில் விளையாடவிருக்கிறது.

காங்கோ கால்பந்து அணி ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எபோலா வைரஸ் காங்கோ, உகாண்டாவில் தீவிரமாக பரவி வருவதால் பலரும் அச்சத்தில் இருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனமும் இது குறித்து எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தக் காரணங்களால் காங்கோ அணி தனது மூன்று நாள் உலகக் கோப்பைக்கான பயிற்சிகளை ரத்து செய்திருக்கிறது.

காங்கோ வீரர்கள் பெரும்பாலும் பிரான்ஸ் நாட்டின் கிளப்பில் விளையாடுவதால் அவர்களுக்கு எபோலா குறித்த தாக்கம் இருக்காதெனக் கூறப்படுகிறது. ஃபிஃபா இது குறித்து காங்கோ கால்பந்து அமைப்புடன் தொடர்ச்சியான உரையாடலும் மருத்துவ, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின் தொடரவும் அதைக் கண்காணித்தும் வருகிறது.

காங்கோ அணி 1974க்குப் பிறகு முதல்முறையாக உலகக் கோப்பக்குத் தேர்வாகியுள்ளது.

Summary

Congo's soccer team seeks alternatives after Spanish city cancels World Cup warmup game due to Ebola

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.