சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

ரவுண்ட் ஆஃப் 32: தோல்வியிலும் கவனம் பெற்ற காங்கோ கோல்கீப்பர்!

தோல்வியிலும் கவனம் பெற்ற காங்கோ கால்பந்து அணியின் கோல்கீப்பர் குறித்து...

Congo goalkeeper Lionel Mpasi (1) saves from England's Jude Bellingham (10) during the World Cup round of 32 soccer match between England and Congo in Atlanta, Wednesday, July 1, 2026. (AP Photo/Colin Hubbard)

பெல்லிங்கம் அடித்த கோலை தடுத்த காங்கோ கோல்கீப்பர். - படம்: ஏபி

Updated On :

காங்கோ கால்பந்து அணியின் கோல்கீப்பர் லியோனல் எம்பசி ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் சிறப்பாக விளையாடி, தோல்வியிலும் கவனம் பெற்று வருகிறார்.

இங்கிலாந்து - காங்கோ அணிகள் மோதிய போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 7ஆவது நிமிஷத்தில் காங்கோ கோல் அடிக்க, இங்கிலாந்து திணறியது.

இரண்டாம் பாதியில், 75, 86ஆவது நிமிஷத்தில் ஹாரி கேன் கோல் அடித்து 2-1 என இங்கிலாந்து வெற்றி பெற உதவினார். காங்கோ அணியினர் சோகத்துடன் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறினார்.

இந்தப் போட்டியில் காங்கோவின் கோல்கீப்பர் முதல் பாதியிலேயே 4 கடினமான கோல்களை தடுத்து அசத்தினார். இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்கம் இவரைப் பாராட்டியது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.

மொத்தமாக ஐந்து கோல்களை தடுத்த இவர், “எனது நாட்டை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” எனக் கூறினார். சமூக வலைதளத்தில் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த உலகக் கோப்பையில் பல கோல்கீப்பர்கள் கவனம் பெற்று வந்துள்ளார்கள். ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக விளையாடவிருக்கும் கேப் வெர்டே கோல்கீப்பரும் ஒரே நாளில் பல மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Round of 32: Congo goalkeeper Lionel Mpasi grabs attention despite defeat!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.