ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

7 போட்டிகளில் 6 முறை க்ளீன்ஷீட்: சாதனை படைத்த ஸ்பெயின் கோல்கீப்பர்!

கால்பந்து உலகக் கோப்பையில் சாதனை படைத்த கோல்கீப்பர் குறித்து...

News image

பிரான்ஸ் வீரரின் கோலை தடுக்கும் ஸ்பெயின் கோல்கீப்பர். - படம்: ஏபி

Updated On :15 ஜூலை 2026, 2:49 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் ஸ்பெயின் கோல்கீப்பர் உனாய் சிமோன் (29 வயது) அதிகமான க்ளீன் ஷீட்டுகளை (கோல் விட்டுக்கொடுக்காமல் இருப்பது) எடுத்து சாதனை படைத்துள்ளார்.

அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-0 என பிரான்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியிலும் ஸ்பெயின் ஒரு கோல்கூட எதிரணிக்கு விட்டுக்கொடுக்கவில்லை. எந்த ஒரு அணியும் ஒரே உலகக் கோப்பையில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு நடந்த இந்த அரையிறுதிப் போட்டியில் கோல்கீப்பர் உனாய் சிமோன் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக 42ஆவது நிமிஷத்திலும் 81ஆவது நிமிஷத்திலும் பெனால்டி பாக்ஸுக்கு வெளியே வந்து கோலை தடுத்தது மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது.

அதிலும் 81ஆவது நிமிஷத்தில் இரண்டு முறை கோலை தடுத்திருப்பார். ஒருமுறை பெனால்டி பாக்ஸுக்கு வெளியேவும் அடுத்த சில நொடிகளிலேயே பாக்ஸுக்குள்ளேயும் சென்று பந்தை தடுத்து அசத்தினார்.

ஸ்பெயின் அணியில் பிரீமியர் லீக்கில் புகழ்வாய்ந்த டேவிட் ராயா, லாலிகாவில் புகழ்பெற்ற ஜோன் கார்சியா இருந்தும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதன் காரணம் தற்போது அனைவருக்கு புரிந்திருக்கிறது.

இந்த உலகக் கோப்பையில் கேப் வெர்டே, சௌதி அரேபியா, உருகுவே, ஆஸ்திரியா, போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஒருகோல்கூட விட்டுக்கொடுக்காமல் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை ஸ்பெயின் அணிக்கும் அதன் கோல்கீப்பர் உனாய் சிமோனுக்கும் மகுடமாக மாறியுள்ளது.

Summary

Unai Simon sets the record for most clean sheets by a goalkeeper at a single men’s World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.