ஸ்பெயினை திணறடித்த கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்ஹா ஒரே நாளில் மிகப்பெரிய நட்சத்திரமாக பிரபலமாகியுள்ளார்.
அமெரிக்காவின் ஜியார்ஜியா, அட்லாண்டா திடலில் நேற்று (ஜூன் 15) நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை போட்டியின் ஹெச் பிரிவு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் கொண்ட ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் அணியை மிகச் சிறிய நாடான கேப் வெர்டே கால்பந்து அணி எதிர்கொண்டது.
மிக வலிமையான வீரர்களைக் கொண்ட ஸ்பெயின் அணி எளிதில் வெற்றி பெறும் என கருதப்பட்ட நிலையில், 5 லட்சம் மக்கள் தொகையே கொண்ட சிறிய ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே கால்பந்து அணியுடனான கடுமையான மோதலில், ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இப்போட்டியில் கேப் வெர்டே அணியின் ஆதிக்கத்துக்கு 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹா முதன்மைக் காரணமாக அமைந்தார்.
ஹீரோவாக ஜொலித்த அவர், ஸ்பெயின் அணி அடித்த 27 கோல் முயற்சிகளை முறியடித்தார். சுவர் போல கோல் கம்பம் முன் நின்ற வோசின்ஹா, போட்டி முடிவில் விசில் அடிக்கப்பட்டபோது ஸ்கோர் கார்டை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார்.
70-வது நிமிடத்தில் களமிறங்கிய இளம் நட்சத்திர வீரர் லேமின் யாமல், தனது பாணியில் தாக்குதலைத் தொடர்ந்தார். 88-வது நிமிடத்தில் யாமல் கொடுத்த பாஸ்ஸை மைக்கேல் ஓயர்சபல் கோலாக மாற்ற முயன்றார். ஆனால், கேப் வெர்டே வீரர்கள் கடைசி வினாடியில் அதைத் தடுத்து நிறுத்தினர்.
ஆட்டம் முடிவை நெருங்கிக் கொண்டிந்தபோது கேப் வெர்டே வீரர் டைனி போர்கேஸ் அடித்த கோல் கம்பத்தை நோக்கி அடித்த ஷாட்டை ஸ்பெயின் கோல் கீப்பர் உனய் சிமோன் தடுத்தார். இல்லையென்றால் சாம்பியன் அணியான ஸ்பெயினுக்கு அதிர்ச்சியளித்திருக்கும்.
போட்டி முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோல் கீப்பர் வோசின்ஹா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
யார் இந்த வோசின்ஹா?
40 வயதில், உலகக் கோப்பையில் அறிமுகமான இரண்டாவது வயதான வீரர் என்ற பெருமையை வோசின்ஹா பெற்றார்.
2018 போட்டியில் பங்கேற்றபோது 45 வயதாக இருந்த, எகிப்தின் முன்னாள் கோல்கீப்பர் எஸாம் எல் ஹடாரி ஃபிஃபா கால்பந்து போட்டியில் அதிக வயதில் பங்கேற்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2012-ல் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அறிமுகமான வோசின்ஹா, கேப் வெர்டே அணிக்காக 90 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Summary
Cape Verde goalkeeper Vozinha has become one of the biggest success stories of the FIFA World Cup
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

50,000 டூ 70 லட்சம்... ஒரே நாளில் உலகப் பிரபலமான கோல்கீப்பர் வோசின்ஹா!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை; டிராவில் முடிந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்!

ஃபிஃபா உலகக் கோப்பை: 7 கோல்கள் அடித்து ஜெர்மனி அபார வெற்றி!







