சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

10/16: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 10 அணிகள்!

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 10 அணிகள் குறித்து...

10 teams qualified for the Round of 16

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 10 அணிகள். - படம்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை.

Updated On :

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு இதுவரை (ஜூலை 2, காலை 7.36 மணி வரை) 10 அணிகள் தேர்வாகியுள்ளன. மீதம் 6 அணிகள் மூன்று நாள்களில் தேர்வாகவிருக்கின்றன.

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் கடந்த ஜூன் 11 முதல் நடைபெற்று வருகிறது. இதில் போட்டிகளை நடத்தும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரவுண்ட் ஆஃப் 32 சுற்றின் முதல் நாளில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய கனடா ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முதலில் முன்னேறியது. அடுத்தாக, பிரேசில் ஜப்பான் மோதிய போட்டியில் பிரேசில் 2-1 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இரண்டாம் நாளில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஜெர்மனியை பராகுவேவும் நெதர்லாந்தை மொராக்கோ அணியும் வென்றன. ஐவரி கோஸ்டை நார்வே வென்றது.

மூன்றாவது நாளில் ஸ்வீடனை பிரான்ஸும், ஈகுவடாரை மெக்சிகோவும் காங்கோவை இங்கிலாந்தும் வீழ்த்தின.

நான்காவது நாளான இன்று செனகலை பெல்ஜியமும் போஸ்னியாவை அமெரிக்காவும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

கனடா, பிரேசில், பராகுவே, மொராக்கோ, நார்வே, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய 10 அணிகள் இதுவரை தேர்வாகியுள்ளன.

Summary

10/16: FIFA World Cup The Round of 16 is filling up!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.