பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

எனது வெற்றி பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்

பிகார் இடைத்தேர்தலில் தன்னுடைய வெற்றி குறித்து பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததாவது...

Bihar byelection: Prashant Kishor won

பிரசாந்த் கிஷோர் - படம் - ஏஎன்ஐ

Published On :

பிகார் இடைத்தேர்தலில் தன்னுடைய வெற்றி என்பது பாஜக தலைமைக்கான செய்தி என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் ததியா, பிகாரின் பங்கிப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது இந்தியத் தேர்தல் ஆணைய இணையதளத்தின்படி, மொத்தமுள்ள 31 சுற்றுகளில் 28 வது சுற்றின் முடிவில் 59,213 வாக்குகள் பெற்று, பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் உள்ளார். மீதம் 3 சுற்றுகளே உள்ள நிலையில், அதில் உள்ள வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் பிரசாந்த் கிஷோரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:

இது சட்டப்பேரவை உறுப்பினரை உருவாக்கும் தேர்தல் அல்ல; பிகாரில் ஒரு நல்ல மனிதர் முதல்வராக வேண்டும். அப்போதுதான் பிகாரில் கல்வியும் வேலைவாய்ப்பும் உருவாகும் என்ற செய்தியை பாஜகவின் தலைமைக்கு உணர்த்துவதற்கான தேர்தல் இது.

மக்கள் இந்தச் செய்தியைத் தந்துள்ளனர். வாக்களித்த மக்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். வாக்களிக்காதவர்களையும் வெற்றிபெற முயற்சிப்பேன். இதில் முக்கியமானது என்னவென்றால், பிகாருக்கு ஒரு நல்ல தலைமை கிடைக்க வேண்டும். இங்கிருந்து மக்கள் இடம்பெயர்வது நிறுத்தப்பட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

Summary

Jan Suraaj party leader Prashant Kishor stated on Monday (August 3) that his victory in the Bihar by-election is a message to the BJP leadership.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.