சிஜேபி போராட்ட வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் நடைபெற்ற வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, தர்மேந்திர பிரதானும் பதவி விலகினார்.
இந்தப் போராட்டத்தின்போது, சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். அதன் பிறகு, போராட்டம் நாடு முழுவதும் வெடித்தது. இதனால், நாடு முழுவதும் போராடிய போராட்டக்காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற குற்றப் பின்னணி இல்லாத 18 வயதுக்குக் குறைவான மாணவர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் ஜூலை 28 அன்று உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாமல் மாநில அரசுகள் மாணவர்களைக் கைது செய்து வருவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து, சிஜேபி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, “சிஜேபி போராட்ட வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. முந்தைய தீர்ப்பில் பயன்படுத்திய குற்றப் பின்னணி என்ற சொல் கொடிய மற்றும் மோசமான குற்றங்களை செய்தவர்களைக் குறிக்கும்” என்று தெளிவுபடுத்தியுள்ளது.
Summary
The Supreme Court stated on Monday (August 3) that states have full freedom to withdraw cases related to the CJP protests.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கை

என் மகனை ஆரத்தி எடுத்து வரவேற்பேன்: சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே தாய் பெருமிதம்!

மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்!

சிஜேபியுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நிறைவு!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government




