தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனா

விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவுடன் தமிழக முதல்வராகிறார் விஜய் என்று ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

News image

ஆதவ் அர்ஜுனா - தொல். திருமாவளவன் - X - photho

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்பதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்திருப்பதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

ஜனநாயகம் காக்கப்படும், மக்களுடைய ஆதரவுடன் தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் விஜய் உருவாவார் என்று கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவுக் கடிதத்துடன் பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.

ஆதரவு அளித்த இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் ஆசான் திருமாவளவனுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் ஆதவ் அர்ஜுனா.

விசிக தலைவர் தொல். திருமாவளவனை, தவெக தலைவர் விஜய் தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்துக் கொண்டதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விசிகவின் ஆதரவு அறிவிப்பு மூலம், கடந்த ஐந்து நாள்களாக தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைவதில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 107 தவெக உறுப்பினர்களுடன் 5 காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரிகள் தலா இரண்டு கட்சிகள் என 116 உறுப்பினர்களுடன் தவெக கடந்த ஒரு சில நாள்களாக ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை என்ற 118 பலத்தைப் பெற போராடி வந்தது. இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் இன்று மாலை தன்னுடைய நிபந்தனையற்ற ஆதரவை அளித்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, இந்திய முஸ்லீம் யூனியன் கட்சியும் தன்னுடைய ஆதரவை அளித்ததால், தவெகவுன் பெரும்பான்மை பலம் 120 ஆனது.

தவெக சார்பில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில், ஆளுநரை சந்திக்க தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று மாலை 5 மணிக்கு நேரம் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

தவெக தமிழ்நாட்டில் நிலையான மற்றும் ஜனநாயக ஆட்சியமைக்க விடுதலைச் சிறுத்தைகள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான கடிதத்தையும் தொல். திருமாவளவன், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கிய புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளது.

இதனால், தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்ற தவெக, தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்ற கட்சியாக ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரவிருக்கிறது.

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இன்று விஜய், ஆளுநரை சந்திக்கவிருப்பது நான்காவது முறையாகும்.

Summary

Adhav Arjuna has announced that Vijay will become the Chief Minister of Tamil Nadu with the support of the Liberation Tigers of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.