பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

தொலைபேசியில் அழைத்து ஆதரவு கேட்டார் விஜய்: திருமாவளவன்

விஜய் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்து குறித்து...

News image

விஜய் | திருமாவளவன் - சித்திரிப்பு

Updated On :7 மே 2026, 8:07 pm IST

தொலைபேசியில் அழைத்து ஆதரவு தர வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வைக் கண்டித்து, கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் சார்பில் கடலூரில் இன்று (மே 7) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

”தவெக தலைவர் விஜய், தொலைபேசியில் அழைத்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டார். எங்களால் நேரில் வர முடியவில்லை என்பதால் தொலைபேசியில் அழைப்பதாகக் கூறினார்.

இடதுசாரிகள் எடுக்கும் முடிவை பொறுத்து, எங்களது முடிவு இருக்கும். அதிமுக, திமுக கூட்டணி செய்தி என்பது இன்னும் ஒரு வடிவம் பெறவில்லை. யூகத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

118 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என ஆளுநர் கூறியது, திட்டமிட்ட நெருக்கடி என்று அறிய முடிகிறது” என்றார்.

Viduthalai Chiruthaigal Katchi leader Thol. Thirumavalavan has stated that TVK leader Vijay called him over the phone and requested his support.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.