மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் படுகொலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பொறுப்பு என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜியை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களுடன் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
''பாஜக ஆட்சியின் கீழ், தேர்தல் நடைமுறைகள் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துடன் கைகோர்த்துக்கொண்டு தேர்தல் முடிவுகள் என்ன என்று முதலில் தெரிந்துகொண்டு பின்னர், வெற்றிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பின்னர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதைப்போன்றும், இறுதியாகத்தான் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டதைப் போன்றும் உணர்வு ஏற்படுகிறது.
போராட்டக் குணம் கொண்டவராகவும், துணிச்சலுடன் களமாடுபவராகவும் மமதா பானர்ஜி திகழ்கிறார். அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கப்போவதில்லை.
நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதிப் பங்கைக் கொண்ட பெண்களின் பிரதிநிதியாகத் திகழ்வதால், அவர் பாஜகவினருக்குப் பெரும் சவாலாக இருக்கிறார். ஆணாதிக்க மற்றும் நிலப்பிரபுத்துவ மனப்பான்மை கொண்ட பாஜக தலைவர்களால், ஒரு பெண் உயர்ந்து வருவதைக் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை'' எனக் குறிப்பிட்டார்.
Summary
BJP have completely altered the electoral process Samajwadi Akhilesh Yadav
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!

மமதாவைச் சந்தித்தார் அகிலேஷ் யாதவ்!

மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




