வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்திருப்பதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பாஜகவைக் கடுமையாகச் சாடியுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கல்களுடன் தொடர்புடைய உலகளாவிய எரிசக்தி விலையேற்றத்தின் காரணமாக, தொடர்ந்து மூன்றாவது மாதமாக வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று (மே 1)19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டருக்கான விலை ரூ. 993 உயர்ந்து இதுவரை இல்லாத உச்ச அளவை எட்டியுள்ளது.
சிறிய முதல் பெரிய உணவகங்கள் வரை வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 2,078.50 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ. 3,071.50 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
எனினும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களுக்கான விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
சிலிண்டர்களுக்கு விலை உயர்வதில்லை மாறாக உணவின் விலைதான் உயர்கிறது. இதை, சொந்தமாகப் பணம் கொடுத்து வாங்கி உண்பவர்களால் மட்டுமே உணர முடியும். மற்றவர்களின் உணவுகளைப் பிடுங்கி உண்பவர்களுக்கு இது புரியாது.
சிலிண்டரின் விலையை உயர்த்த விரும்பியிருந்தால், அதை நேரடியாக ரூ. 1,000 என்ற அளவில் முழுமையாகவே உயர்த்தியிருக்கலாம். விலையை ரூ.1,000 ஆக உயர்த்தாமல், அதிலிருந்து வெறும் ரூ. 7 மட்டும் குறைவாக (ரூ. 993) உயர்த்துவதன் மூலம், பாஜகவினர் யாருக்குத்தான் சலுகை காட்டுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொருளாதார மந்தநிலை ஆகிய பிரச்னைகள் குறித்து பாஜக எப்போது கண்டனத் தீர்மானம் கொண்டுவரும். உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் வியாழக்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட ஒரு கண்டனத் தீர்மானத்தை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் மற்றும் பிற இந்தியா கூட்டணிக் கட்சிகள் எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிராகவே அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Summary
Samajwadi Party president Akhilesh Yadav on Friday slammed the BJP for the sharp price rise of commercial cylinders, saying it would make food expensive for the common people.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிலிண்டர் விலை உயர்வு! முதுகில் குத்தும் பாஜக: டி.கே. சிவக்குமார்
5 கிலோ சிலிண்டர் விலை உயர்வு! பாதிப்படையும் சிறு, குறு வியாபாரிகள்!

அதிரடியாக உயர்ந்த 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?
உருவ பொம்மையை எரிப்பு! தீக்காயமடைந்த பாஜக எம்எல்ஏவை நலம் விசாரித்த அகிலேஷ் யாதவ்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு



