தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்

“வாக்கு எண்ணிக்கை காணொலிக் காட்சிகளை வெளியிட வேண்டும்...”

<P>Kolkata: West Bengal Chief Minister and TMC chief Mamata Banerjee with Samajwadi Party   National President Akhilesh Yadav during TMC 'Martyr's

மமதாவுடன் அகிலேஷ் யாதவ் - Center-Center-Delhi

Published On :

லக்னௌ : மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிராக்களில் பதிவு செய்யப்பட்ட காணொலிக் காட்சிகளை பொதுவெளியில் வெளியிட உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் உச்சநீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 293 தொகுதிகளிலும் கடந்த திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியான நிலையில், பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு தொடர்ச்சியாக ஆளுங்கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

இதனிடையே, மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி, அகிலேஷ் யாதவ் புதன்கிழமை (மே 6) செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசியதாவது : “நீதிமன்ற நடைமுறைகள் நேரலையில் ஒளிபரப்பாகும்போது, வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் ஏன் நேரலை செய்யப்படக்கூடாது? சிசிடிவி கேமிராக்கள் ஏன் நேரலையில் இல்லை? அவர்கள் ஏன் அதைச் செய்ய இந்தளவுக்கு பயப்படுகிறார்கள்?

எங்களுடைய கோரிக்கை இதுதான்; மேற்கு வங்க தேர்தல் விவகாரங்களில் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட்டு வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்கப்பட்ட விடியோக்களை நாட்டு மக்கள் முன் வெளியிட வேண்டும்.

மேற்கு வங்கத்தில் என்ன நடைபெற்றதோ அதனை அவர்கள்(பாஜக) மிகப்பெரியளவில் உத்தரப் பிரதேசத்திலும் நடத்துவார்கள். பல்முனை தேர்தல் மாஃபியாவானது ஒன்றாக வேலை பார்த்து, ஆராய்ச்சி செய்து, அவர்களது திட்டத்தை உத்தரப் பிரதேசத்தில்(2027-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்) செயல்படுத்துவார்கள்.

அவர்கள் மேற்கு வங்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய விதமானது அங்குள்ள சூழலை மாற்றியது. அது இப்போது வெளிப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்கு நான் செல்லவிருக்கிறேன்” என்றார்.

Summary

SC should take cognizance of West Bengal poll process: Akhilesh Yadav

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.