மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்தது எனவும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தலைவணங்குவதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாஜக 200க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
இன்று மாலை 6 மணி நிலவரப்படி பாஜக 205, திரிணமூல் காங்கிரஸ் 82, காங்கிரஸ் 2, இடதுசாரி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. இவற்றில் 57 தொகுதிகளுக்கு வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மமதாவின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக முதல்முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,
“2026-ஆம் ஆண்டு மேற்கு வங்க தேர்தல் என்றென்றும் நினைவுகூரப்படும். மக்கள் சக்தி மேலோங்கியுள்ளது. பாஜக-வின் வெற்றி வாகை சூடியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.
மக்கள் பாஜக-விற்கு ஒரு மகத்தான மக்கள் கட்டளையை வழங்கியுள்ளனர். மேற்கு வங்க மக்களின் கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்ற, எங்கள் கட்சி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று நான் உறுதியளிக்கிறேன். சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பையும் கண்ணியத்தையும் உறுதிசெய்யும் ஒரு அரசை நாங்கள் அமைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
Summary
The Lotus blooms in West Bengal: PM Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44

மேற்கு வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!









