தவெக தலைவர் விஜய், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்துள்ளார்.
1977 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு திரைப்பட நடிகராகப் புகழ்பெற்றிருந்த எம்.ஜி.ஆர். முதல்வரானார். 1977 தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட எம்ஜிஆரின் அதிமுக, 33.52 சதவீத வாக்குகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது.
இந்நிலையில் 2026 தேர்தலில் விஜய்யின் தவெக இதுவரை(மாலை 6.30 மணி நிலவரம்) 34.89 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை ஒரு கோடி 62 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்மூலமாக எம்ஜிஆரின் சாதனையை விஜய் முறியடித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி தவெக 107, திமுக 73, அதிமுக 54 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தவெக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 117 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தவெக மிகப்பெரிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
Summary
TN election results 2026: TVK vijay Breaks MGR Record on vote share
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் அதிக கோல்கள்..! சாதனையை சமன்செய்த ஹாரி கேன்!

பெண் பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகளைக் கைதுசெய்ய இபிஎஸ் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தவெக அரசின் மதச்சார்பின்மையை நிரூபிக்க பாஜக வலியுறுத்தல்
எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்?
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




