வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் பெண்களின் பங்களிப்பு விரிவடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் விஷ்ணுபூரில் பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, "பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதனால்தான், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை பெண்கள் ஆசிர்வதிக்கின்றனர்.
வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் பெண்களின் பங்கு விரிவடைய வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. மேலும், அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்.
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி - PTI
ஆனால், நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். மேற்கு வங்கத்தின் பெண்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் துரோகமிழைத்துள்ளது.
மேற்கு வங்க சகோதரிகள் 33 சதவிகித இடஒதுக்கீட்டை விரும்பினர். ஆனால், காங்கிரஸும் திரிணமூல் காங்கிரஸும் சேர்ந்து சதிசெய்து, பெணளுக்கு 33 சதவிகித இடங்களை ஒதுக்கும் சட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை.
ஊடுருவல்காரர்களுக்காக சட்டத்தை மீறும் அதே திரிணமூல் காங்கிரஸ்தான், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முயற்சித்து, அரசியலமைப்பின் கழுத்தை நெரித்து வருகிறது.
மாபெரும் காட்டாட்சிக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் மீது பழங்குடி பெண்கள் மிகுந்த வெறுப்பைக் கொண்டுள்ளனர்.
பாஜகதான், நாட்டுக்கு முதல் பழங்குடி பெண் தலைவரை வழங்கியது. ஆனால், காங்கிரஸும் திரிணமூல் காங்கிரஸும் சேர்ந்து ஒரு பழங்குடி குடியரசுத் தலைவரைத் தோற்கடிக்க ஒரு பெரிய விளையாட்டை விளையாடின.
இதன் பொருள், ஒரு பழங்குடி மகள் நாட்டின் குடியரசுத் தலைவராக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
Summary
West Bengal Polls 2026: More and more daughters should also enter politics, says PM Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்தது! தலைவணங்குகிறேன்! பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைக்கிறதா? வெளியானது கருத்துக் கணிப்பு
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
