கால்பந்து உலகக் கோப்பை பிளே-ஆஃப் சுற்றில் இராக் அணி வென்று 40 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் தேர்வாகி இராக் சாதனை படைத்துள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போருக்கு மத்தியில் இராக் அணி மிகச் சிறப்பாக விளையாடி 2026 கால்பந்து உலகக் கோப்பைக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
மெக்சிகோவின் நியூவோ லியோன் திடலில் தென் அமெரிக்காவின் பொலிவியா அணியும் மத்திய கிழக்கு நாடான இராக் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் இராக் அணி 2-1 என அசத்தல் வெற்றி பெற்றது. இராக் சார்பாக அலி அல்-ஹமாதி 10ஆவது நிமிஷத்திலும், ஹைமேன் ஹுசைன் 53ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.
1986 உலகக் கோப்பைக்குப் பிறகு இராக் அணி முதல் முறையாக தேர்வாகியுள்ளது. இந்த அணி குரூப் 1 பிரிவில் பிரான்ஸ், செனகல், நார்வே அணிகளும் பலப்பரீட்சை செய்யவிருக்கிறது.
அமெரிக்க - இஸ்ரேல் படைகள் இராக்கை தாக்கியதால் விமானம் இல்லாத நிலையில், 550 மைல்ஸ் தூரம் பேருந்தில் 3 நாள் பயணம் செய்து ஜோர்டான் எல்லைக்கு வந்தார்கள். இந்தக் காரணத்தால் போட்டி தாமதமாக நடத்தப்பட்டது.
பல இராக் வீரர்கள் ஐரோப்பாவில் கிளப் போட்டிகளில் இருந்து சொந்த பணத்தை வைத்து பயணித்து வந்தார்கள். இந்தப் போட்டியில் கோல் அடித்த அல் ஹமதி கடந்த 2003 இராக் போரினால் கைக் குழந்தையாக இருக்கும்போது பெற்றோருடன் லிவர் பூல் நகரத்துக்கு குடியேறியதும் குறிப்பிடத்தக்கது.

கொண்டாட்டத்தில் இராக் நாட்டின் கால்பந்து ரசிகர்கள். - ஏபி
கூடுதல் நேரம் 9 நிமிஷத்திலும் பொலிவியா எவ்வளவோ முயற்சித்தும் இராக் அணியின் டிஃபெண்டர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த வெற்றி இராக் மக்களுக்கு மிகுந்த ஆசுவாசத்தை அளித்துள்ளது.
Summary
Iraq in FIFA World Cup after 40 years, A 550-mile bus ride from Baghdad across the border into Jordan, inspiring
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நட்சத்திர வீரர்கள் நிரம்பிய பிரான்ஸ் அணி..! கால்பந்து உலகக் கோப்பைக்குத் தயார்!

சஹீரா, புர்னா பாய் கூட்டணியில் கால்பந்து உலகக் கோப்பைக்கான பாடல்!

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழாவில் நடனமாடும் பாகுபலி பட நடிகை!

கால்பந்து உலகக் கோப்பை: 6 பெண்கள் உள்பட 170 நடுவர்கள் தேர்வு!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




