தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் உலகக் கோப்பைக்கான அடித்தளம்: கேசவ் மகாராஜ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராவதற்கான அடித்தளம் என தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

படம் | ஐசிசி

Published On :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராவதற்கான அடித்தளம் என தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பையை நடத்தும் நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்கா தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராவதற்கான அடித்தளம் என தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி முழுமையாகக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். அடுத்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கு நடைபெறவுள்ளது. அதற்கு தயாராவதற்கு தென்னாப்பிரிக்க அணிக்கு சிறப்பான வாய்ப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அமைந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி உலக சாம்பியன். அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு தொடரை முழுமையாக வெல்வது நம்முடைய நம்பிக்கையை அதிகரிக்க உதவும். உலகக் கோப்பைத் தொடருக்கு இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதற்கான அடித்தளத்தை அமைக்க நமக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 30) நடைபெறுகிறது.

Summary

South African player Keshav Maharaj has described the ODI series against Australia as a foundation for preparing for the World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.