தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்

கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா ஜனதா கட்சி என பெயர் மாற்றியாக வேண்டும் என மத்திய அமைச்சர் வலியுறுத்தியுள்ளது குறித்து...

CJP leader Abhijit Deepke with his supporters.

சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கேவுடன் அவருடைய ஆதரவாளர்கள். - கோப்புப் படம்

Published On :

கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா ஜனதா கட்சி எனப் பெயர் மாற்றியாக வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே செவ்வாய்க்கிழமை (செப். 29) வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.

இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபம் எழுப்பியதாகவும் ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவுகள் மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆகையால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் இல்லையேல், போராட்டம் நடத்தப்படும் எனவும் சிஜேபி தற்போது வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எதற்கெடுத்தாலும் ராஜிநாமாவைக் கோருவதால், அதன் பெயரை ராஜிநாமா ஜனதா கட்சி என மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “அபிஜீத் திப்கே மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர், புத்த மதத்தைச் சேர்ந்தவர் மற்றும் தலித் ஆவார். அவர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். இந்தத் துறைக்குப் புதியவர். நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை நாங்கள் அறிவோம். நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக உழைத்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

Summary

Union Minister Ramdas Athawale stated on Tuesday (Sept. 29) that the 'Cockroach Party' should be renamed the 'Resignation Janata Party'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.