தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனை

எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம் என்று மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்.

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்.

Published On :

சென்னை ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் உடனடியாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

கிட்டத்தட்ட இப்பாதையில் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகியும், இன்னமும் ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்வதில்லை என்றும், இப்படியே சென்றுகொண்டிருந்தால், இந்த ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை விரிவாக்கம் தொடங்கியபோது, ஆதம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் குறைபாடு இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

ரயில் மேடையின் வளைவான பகுதியில் ரயிலுக்கும் மேடைக்கும் இடையே இடைவெளி சற்று அதிகமாக இருந்தது. இது பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால், இங்கு மட்டும் ரயில்கள் நிற்க அனுமதி மறுக்கப்பட்டது.

இன்று வரை இப்பாதையில் சுமார் 50 ரயில்கள் இயக்கப்பட்டு வந்தபோதும், இந்த ரயில் நிலையம் வெறிச்சோடியபடி, ரயில்களின் இயக்கத்துக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.

விரைவில் நடைமேடை சீரமைப்புப் பணிகளை முடித்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பாதுகாப்பு ஒப்புதலைப் பெற்று ரயில்கள் நிற்பதை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், நடைமேடையின் வடிவமைப்பு மாற்றத்துக்கான பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் நடைமேடை உயரம் அதிகரிக்கப்படும் என்கிறார்கள் அதிகாரிகள். இத்தனையும் நடந்து முடிய இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று கேட்டால், உடனடியாக ஒப்புதல் வந்தாலும்கூட, நடைமேடை உயரம் அதிகரிக்கப்பட்டு, பிறகு ஆய்வு நடத்தி, ரயில் நிலையத்தில் ரயில் நிற்க அனுமதி பெற்று நடைமுறைப்படுத்த இந்த ஆண்டு இறுதிவரையாகும் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.

எங்கள் பகுதியில் ரயில் நிலையம் இருக்கிறது, ரயில்களும் செல்லும் ஆனால் ரயில் மட்டும் நிற்காது என்று ஆதங்கத்தோடு கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.