மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராகும் மோஹித் சர்மா?

சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohit Sharma

மோஹித் சர்மா - படம் | மோஹித் சர்மா (எக்ஸ்)

Published On :

சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீஃபன் பிளெமிங் அந்தப் பொறுப்பிலிருந்து விலகியதையடுத்து, அண்மையில் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக எரிக் சிம்மன்ஸ் செயல்பட்டு வருகிறார். அடுத்த சீசனில் அவருக்குப் பதிலாக மோஹித் சர்மா பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.

38 வயதாகும் மோஹித் சர்மா இந்திய அணிக்காக 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 48 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். அவர் கந்த ஆண்டு டிசம்பரில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பாக அணி நிர்வாகம் தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Reports indicate that Mohit Sharma is set to be appointed as the bowling coach of Chennai Super Kings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.