
மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லா
மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முதல்வர் பேசியது குறித்து...

ஒமர் அப்துல்லா. - படம் - பிடிஐ
மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா செவ்வாய்க்கிழமை (செப். 29) பேசினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்டமுறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
ஆகையால், ஞானேஷ் குமாரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது அவரே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
நீட் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் நாங்கள் போராடுவோம் என எச்சரித்துள்ளது.
இதையடுத்து, அரசியலமைப்பின் 324-வது பிரிவின்படி 'தேர்தல் ஆணையத்திற்கு கூட்டு முடிவெடுக்கும் அதிகாரம்தான் உள்ள நிலையில், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ஞானேஷ் குமார் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்தார்? அவர் எப்படி தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் தொடர்ந்து செயல்படுகிறார்?' என்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஞானேஷ் குமாருக்கு எதிராக தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, “மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
VIDEO | Srinagar: "Gyanesh Kumar should be awarded Bharat Ratna or made country's President as he gifted Bengal to BJP", J&K CM Omar Abdullah takes jibe at CEC over SIR row. pic.twitter.com/HkRATsv7zX
— Press Trust of India (@PTI_News) September 29, 2026
Summary
Jammu and Kashmir Chief Minister Omar Abdullah said on Tuesday (Sept. 29) that Gyanesh Kumar, who gifted West Bengal to the BJP, should be awarded the Bharat Ratna.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






