
ஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!
ஞானேஷ் குமாருக்கு எதிராக அபிஜித் தீப்கே போராட்டம் அறிவித்திருப்பது பற்றி...

அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு இரு தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டத்துக்கு புறம்பாக தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தியதாக செய்திகள் வெளியானதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே, அடுத்த 48 மணிநேரத்தில் ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஞானேஷ் குமார் நாளைக்குள் பதவி விலகாவிட்டால், சிஜேபி சார்பில் அக்டோபர் 2 அன்று மும்பையில் போராட்டம் தொடங்கப்படும் என்று அபிஜித் தீப்கே இன்று அறிவித்துள்ளார்.
மேலும், மும்பையில் தொடங்கும் போராட்டம், நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றும், காந்தி ஜெயந்தி அன்று, ஜனநாயகத்தைக் காக்க நாம் உறுதியேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
If Gyanesh Kumar does not resign by tomorrow, CJP will begin its nationwide protest from Mumbai on 2 October, and take it to cities across India.
— Abhijeet Dipke (@abhijeet_dipke) September 25, 2026
This Gandhi Jayanti letâs pledge to save democracy.
முன்னதாக, ”இந்தியாவில் தேர்தல்கள் முறைகேடாக நடத்தப்படுகின்றன. ஆனால், முறைகேடுகள் நிறைந்த இந்த தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் அந்த தேர்தல்களுக்கு நீங்கள் அங்கீகாரம் அளிக்கிறீர்கள். தேர்தலில் போட்டியிடாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்” என்று அபிஜித் தீப்கே பதிவிட்டிருந்தார்.
Summary
Protest against Gyanesh Kumar from October 2 - Abhijit Dipke announces!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





