பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

ஞானேஷ் குமாரை கைது செய்து மறுதேர்தல் நடத்த வேண்டும்! மமதா பானர்ஜி

ஞானேஷ் குமாரை கைது செய்ய மமதா பானர்ஜி கோரிக்கை...

Gyanesh Kumar | Mamata Banerjee

ஞானேஷ் குமார் | மமதா பானர்ஜி - கோப்புப்படம்

Published On :

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையின் போது, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை ஆட்சேபனை தெரிவித்தும், அவர்களின் கருத்தை பொருட்படுத்தாமல், சட்டத்துக்கு புறம்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட நாட்டின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மமதா பானர்ஜி வெளியிட்டிருக்கும் விடியோவில் தெரிவித்திருப்பதாவது:

”இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் மற்றும் முறைகேடான ஒரு சம்பவம். எங்கள் வாழ்நாளில் இதுபோன்ற ஒன்றை நாங்கள் பார்த்ததே இல்லை. தலைமைத் தேர்தல் ஆணையரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் பதவியில் தொடர்வதற்கான எந்த தார்மீக உரிமையும் அவருக்கு இல்லை.

அரசியலமைப்பைத் தகர்க்க முடியாது என்பதை பாஜக உணர வேண்டும். அவர்களால் ஜனநாயகத்தை அழிக்க முடியாது. பாஜகவின் ஐடி பிரிவில் உள்ளவர்களை வாக்காளர் பதிவு அதிகாரிகளாக நியமிக்க முடியாது. நாங்கள் முன்பு கூறியது தற்போது அம்பலமாகியுள்ளது.

ஞானேஷ் குமார் காவல்துறையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். பாஜகவுடன் இணைந்து, பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்டவர்களை தேர்தல் பணியில் அமர்த்தியுள்ளனர். இது போன்ற ஒரு முறைகேடு இதுவரை நடந்ததே இல்லை.

உங்களுக்கு குறைந்தபட்சம் கண்ணியம் இருந்தால், உங்களைக் கைது செய்யுமாறு நீங்களே கோருவீர்கள். மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Gyanesh Kumar must be arrested and a re-election held! – Mamata Banerjee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.