
முறைகேடு என்று கூறிக்கொண்டே எதிர்க்கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுவது ஏன்? அபிஜித் தீப்கே கேள்வி
எதிர்க்கட்சிகள் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே கூறியுள்ளது பற்றி...

அபிஜித் தீப்கே - ENS
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அந்த தேர்தல்களில் போட்டியிடுவது, முறைகேடான தேர்தல்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றது என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு இரு தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நடைமுறைப்படுத்தியதாக செய்திகள் வெளியானதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே, இந்த முறைகேடான தேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"எதிர்க்கட்சிகளுக்கு:
இந்தியாவில் தேர்தல்கள் முறைகேடாக நடத்தப்படுகின்றன. ஆனால், முறைகேடுகள் நிறைந்த இந்த தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் அந்த தேர்தல்களுக்கு நீங்கள் அங்கீகாரம் அளிக்கிறீர்கள். அத்துடன் அவை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவது போன்ற ஒரு மாயையைத் தக்கவைக்கவும் உதவுகிறீர்கள்.
ஒருவேளை, தேர்தலில் போட்டியிடாவிட்டால் தாங்கள் அரசியலில் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நீங்கள் (எதிர்க்கட்சிகள்) தொடர்ந்து போட்டியிடலாம்.
ஆனால், வாக்குகள் திருடப்படும்போது, உங்களுடைய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் பக்கம் இழுக்கப்படும்போது, உங்கள் கட்சிகள் பிளவுபடுத்தப்படும்போது, நீங்கள் எதைப் பாதுகாக்க முயற்சிக்கிறீர்கள்?
இது அரசியல் பிழைப்புக்கான முயற்சி அல்ல. உங்களை பலவீனப்படுத்தவோ, உங்கள் கட்சியைப் பிளவுபடுத்த, உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தன்வசப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பில், நீங்கள் உயிர்வாழ மட்டுமே முயற்சிக்கிறீர்கள். இப்படி எவ்வளவு காலத்திற்கு உங்களால் தாக்குப்பிடிக்க முடியும்?
உங்களுக்குத் தேவையான மாநிலங்களில் தேர்தல் முறைகேடு நடக்கும்போது மட்டும் அதைப் பற்றிப் பேசிவிட்டு, மற்ற இடங்களில் நடக்கும்போது மௌனமாக இருக்கிறீர்கள். தேர்தல் முறைகேடு என்பது எந்த மாநிலத்தில் அல்லது எந்தக் கட்சி பாதிக்கப்படுகிறது என்றில்லாமல் ஒரு முக்கியப் பிரச்னையாக அனைத்துக் கட்சியினரும் நினைக்க வேண்டும்.
விளையாட்டு முறைகேடாக நடத்தப்படுகிறது என்று சொல்லிக்கொண்டே, அதே விளையாட்டைத் தொடர்ந்து நீங்கள் விளையாட முடியாது. தேர்தல்களில் உங்கள் பங்கேற்பு மட்டுமே இத்தகைய முறைகேடான தேர்தல்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.
உங்கள் சொந்த அரசியல் இருப்பைப் பற்றிக் சிந்திப்பதற்கு முன், நாட்டையும் ஜனநாயகத்தையும் பற்றி சிந்தியுங்கள். ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுங்கள்; முறைகேடுகள் நிறைந்த தேர்தல்களில் பங்கேற்பதை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
For opposition:
— Abhijeet Dipke (@abhijeet_dipke) September 25, 2026
Yes, elections are being rigged. But when you continue to participate in rigged elections, you legitimise these elections and help maintain the illusion that they are free and fair.
Maybe you keep contesting because you fear that if you donât, you will stopâ¦
முன்னதாக, 48 மணி நேரத்தில் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Why do opposition parties contest elections after alleging irregularities? Abhijit Dipke asks
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







