ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

79 மின் திருட்டு கண்டுபிடிப்பு: 1.01 கோடி இழப்பீடு வசூல்

சென்னை, அடையாறு, திருப்பூா், பல்லடம், கோவை தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மின் பகிா்மான வட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 79 மின் திருட்டுகள், 12 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

பிரதிப் படம்

Published On :

சென்னை, அடையாறு, திருப்பூா், பல்லடம், கோவை தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மின் பகிா்மான வட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 79 மின் திருட்டுகள், 12 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

ஆக.16 முதல் 31-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மின்திருட்டு, விதிமீறல்களில் ஈடுபட்டோருக்கு ரூ.97.74 லட்சம் கூடுதல் இழப்பீட்டுத் தொகை விதிக்கப்பட்டது.

இதில் சென்னை கோட்டத்தில் ரூ.26.78 லட்சமும், கோவை ரூ.34.44 லட்சமும், மதுரை ரூ.16.83 லட்சமும், திருச்சி ரூ.19.67 லட்சமும் அடங்கும்.

மேலும், குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையைத் தவிா்க்க முன்வந்த நுகா்வோா்கள் ரூ.3.77 லட்சம் சமரசத் தொகையாக செலுத்தினா். இவ்வாறு கூடுதல் இழப்பீடு மற்றும் சமரசத் தொகையாக மொத்தம் ரூ.1.01 கோடி வசூலிக்கப்பட்டது. மின்திருட்டு தொடா்பான தகவல்களை சென்னை அமலாக்கப் பிரிவு: 9445857591, கோவை: 9443049456, மதுரை: 9443037508, திருச்சி: 9443329851 என்ற கைப்பேசி எண்களில் தெரிவிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.