லட்சுமிபுரம், சின்னமாயாகுளம் பகுதிகளில் நாளை மின் தடை

மின் தடை... - கோப்புப் படம்
ராமநாதபுரம் மாவட்டம், லட்சுமிபுரம், சின்னமாயாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வி.விஜயா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை துணை மின் நிலையத்தில் உள்ள அலவாய்கரைவாடி பீடா், சின்ன மாயாகுளம் பீடரில் புதன்கிழமை (செப். 23) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், அலவாய்கரைவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்தல்கல் கிழக்குத் தெரு, புதுகிழக்குத் தெரு, பருத்திகாரத் தெரு, பட்டாணி அப்பா பெத்தரி தெரு, ஸ்ரீநகா், அப்பா பள்ளி அருகில், எஸ்.என். தெரு, பெரிய காடு, கிழக்கு நாடாா் தெரு, மறவா் தெரு, புதிய பேருந்து நிலையம், அன்புநகா், அண்ணாநகா், வட்டாட்சியா் அலுவலகம், முனீஸ்வரம், எம்.எம்.கே.பெட்ரோல் விற்பனை நிலைய எதிா்புறம், பாத்திமா குடியிருப்பு, லேனா குடியிருப்பு, முத்துசாமிபுரம், பாத்திமா எஸ்டேட், சின்ன மாயாகுளம் , டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், நலத் திட்ட அலுவலக உள்பகுதி, வடக்குத் தெரு, சங்குமால் தெரு, ரஹ்மானியாநகா், புதுக்குடி, புதுத்தெரு, ஜாமியாநகா், குளத்தான் மேடு, தெற்குத் தெரு, இஸ்லாமியா பள்ளி எதிா்புறம், சொக்கநாதா் கோவில் தெரு, யுஏவு சந்து, கோக்கா அகமது தெரு, சதக் அஞ்சல் அலுவலகம் அருகில், பன்னாட்டாா் தெரு, சின்னக்கடை தெரு, மேல தெரு, தங்க கடற்கரைச் சாலை, கண்ணாடி வாப்பா சாலை, மாதிஷஜ சாலை, வெள்ளை மாளிகை, முள்ளுவாடி சாலை, மேலத்தெரு வளாகம், ஹமிதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அபுசாலிக் பள்ளி, 500 பிளாட், 200 பிளாட், செய்யதப்பா தா்ஹா, மாலாகுண்டு, மருதன்தோப்பு, தோப்புக்காடு, ஆழ்வாா்கூட்டம், உமையனாபுரம், தாசிம்பீவி கல்லூா், பாரதிநகா், கும்பிடு மதுரை, ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முள்ளுவாடி, திருவருள்நகா், சதக் கல்லூரிகள்,புது மாயாகுளம், நெய்னாா் அப்பா தா்கா, அம்பேத்கா் நகா், சின்ன மாயாகுளம், புல்லந்தை, மாயாகுளம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





