பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பாலகாட்டில் பரவும் மர்ம காய்ச்சல்! பழங்குடியின கிராமங்களில் அபிஜித் தீப்கே ஆய்வு!

தொற்று நோய்களால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் ஆய்வு நடத்தியது பற்றி..

அபிஜித் தீப்கே

Published On :

தொற்று நோய்களால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு கரப்பான்பூச்சி கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள பாலகாட் மாவட்டத்தின் பிர்சா மற்றும் பைஹார் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகளைப் பாதிக்கும் மர்ம நோய் கடந்த ஜூன் மாத இறுதியில் பரவியது. இந்த மர்ம நோய்க்கு இதுவரை 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட மருத்துவமனைகளில் இடநெருக்கடி, குடிநீர் மாசு மற்றும், ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை நிலவுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்றுநோய்களால் உயிரிழந்த விவகாரத்தால் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய சில நாள்களுக்குப் பிறகு சிபிஐ ஒருங்கிணைப்பாளர் அபிஜித்தின் பயணம் அமைந்துள்ளது.

கரப்பான்பூச்சி கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே பாலகாட் மாவட்டத்துக்கு இன்று நேரில் சென்றார். அங்கு உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து, அடோரி, கோர்கா மற்றும் போண்டாரி ஆகிய கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள சுகாதார வசதிகள், குழந்தைகள் உயிரிழந்ததற்கான சூழல் குறித்த விவரங்களைச் சேகரித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய தீப்கே,

மர்ம நோயால் தங்கள் குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு நாங்கள் முழுமையான அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகாரிகள் ஒப்புக்கொண்டபோதிலும், அதற்கான பொறுப்பை நிர்ணயிக்க எந்தவொரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. நிர்வாகத்தின் செயலற்ற தன்மையைக் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

நாங்கள் பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் நிர்ணயிக்கவே இங்கு வந்துள்ளோம் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER