வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

நீர்வீழ்ச்சியில் குளித்த 10 நாள்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி! ம.பி.யில் அதிர்ச்சி!

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் அடுத்தடுத்து நிகழ்ந்த பலி பற்றி..

Rajasthan

சடலமாக மீட்பு - file photo

Published On :

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரியில் நீர்வீழ்ச்சிக்குச் சென்ற 10 நாள்களுக்குள் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 16 அன்று கோரா திலா பகுதிக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நால்வர் குளித்துள்ளனர். அதன்பிறகு காய்ச்சல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. பாதிக்கப்பட்ட நால்வரின் உடல்நிலையும் ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் மோசமடைந்தது.

குடும்பத்தினரின் தகவலின்படி,

அகமதுவின் 14 வயது மகன் தாஹிர் ஆகஸ்ட் 18 அன்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்குக் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் அவரது ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்ததையடுத்து 2 நாள்களுக்குள் அவர் உயிரிழந்தார்.

அந்த அதிர்ச்சியிலிருந்து குடும்பத்தினர் மீள்வதற்கு முன்பே, அகமதுவின் சகோதரியின் 19 வயது மகனான அயாஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிவபுரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நிலை மோசமடைந்ததையடுத்து குவாலியருக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 23ல் அவர் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, அகமதுவின் இளைய மகன்களான தருஃப் (9) மற்றும் தாசிஃப் (11) ஆகியோருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர்களது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகஸ்ட் 31 அன்று காலையில் தருஃப், அதே நாள் மாலையில் அவரது மூத்த சகோதரரும் உயிரிழந்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தது வழக்கத்திற்கு மாறான ஒன்று. இதுகுறித்து நிர்வாகமும், சுகாதாரத் துறையும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மாவட்டத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் ரிஷிஷ்வர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் தொற்றுநோய் காரணமாகவே நால்வரும் உயிரிழந்திருக்கலாம்.

இதுவரை உடற்கூராய்வு நடத்தப்படவில்லை, இறப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அவர்கள் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.