தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்பு

டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் உள்பட போக்குவரத்து அலுவலகத்தின் சேவைகள் குறித்து முதல்வர் விஜய்யின் அறிவிப்புகள் பற்றி...

cm vijay

முதல்வர் விஜய் - TN assembly

Published On :

வருகிற செப். 15 முதல் வாகன ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை மக்கள் எளிதாக ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.

அதேபோல ஓட்டுநர் உரிமத்திற்கு தேர்வான நாளிலே இணையம் மூலமாக ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

போக்குவரத்து அலுவலகத்தின் சேவைகள் குறித்து பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.

"ஓட்டுநர் உரிமம் (Digital driving licence) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (Digital registration certificate) ஆகியவை டிஜிட்டல் முறையில் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் செப்டம்பர் 15 முதல் டிஜிட்டல் முறையில் இவற்றை வழங்க வசதி ஏற்படுத்தப்படும்.

மின்னணு வாகனப் பதிவு சான்றிதழ் முறை (digital RC) மூலமாக, புதிய வாகனம் வாங்குவோர் இணைய வழியில் பதிவு சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் (Digital Driving Licence) வழங்கப்படும்.

அரசு அலுவலங்களில் ஊழியர்கள், ஆவணங்களை இணையம் மூலமாகவே சரிபார்க்க முடியும். இதன் மூலமாக போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும். ஆவணம் தொலைந்தால் மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் எந்தவொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து ஓட்டுநர் உரிமம் பெறும் வகையில் வசதிகள் படிப்படியாக கொண்டுவரப்படும்" என்றார்.

Summary

Driving License and Vehicle Registration Certificate in Digital Format: CM Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.