நடிகர் ஜெயம் ரவி என்று அறியப்படும் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த அதே வேளையில், ரவி - கெனிஷா நட்பும் வெளிச்சத்துக்கு வந்து விவாகரத்து புயல் சூறாவளியாக மாறியது.
அவ்வப்போது கெனிஷாவின் பதிவு, ஜெயம் ரவியின் செய்தியாளர் சந்திப்பு, ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் சமூக வலைத்தளங்களை அலற விடுவது வழக்கம்.
அந்த வகையில், ஆர்த்தி ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்று மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. அவர் அதில் பெரிதாக எந்த விஷயத்தையும் பெயர்களையும் குறிப்பிடவில்லை. எதற்காக இதைச் சொல்லியிருக்கிறார் என்று கூட தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அனைவருக்குமே அகராதியே இல்லாமல் புரிந்துவிட்டிருக்கிறது.
அண்மையில்தான், ஆர்த்தி ரவி, நீதிமன்றத்தில் மாத செலவுக்கு பெரிய தொகை ஒன்றை கோரியிருந்த நிலையில், ஜெயம் ரவி மாதம் மூன்று லட்சம் வழங்கவும், பிள்ளைகளைப் பார்க்க அனுமதி அளித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில்தான், ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “யாராவது உங்களைச் குணப்படுத்துவதாகக் கூறினால், அவர்களை அங்கிருந்து விரட்டி அடியுங்கள்.” என்று பதிவிட்டுள்ளது விவாதப்பொருளாகியிருக்கிறது.
இந்த பதிவில், அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் நேரடியாக கெனிஷாவைத்தான் குறிப்பிடுகிறார் என்று ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். காரணம், ஜெயம் ரவிக்கு ஹீலர் என்ற முறையில் அறிமுகமானவர்தான் கெனிஷா. பிறகு இருவருக்குள்ளும் நட்பு மலர்ந்து அவர்கள் ஒன்றாகவே பொது வெளியில் தோன்றத் தொடங்கினர்.
ஆர்த்தியின் இந்த பதிவுக்கு பல்வேறு ரியாக்ஷன்கள் வந்துள்ளன. எதற்கான இந்தப் பதிவை அவர் செய்தார் என்றுகூட ஆர்த்தி கூறவில்லை. ஆனாலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ரவி மோகன் - ஆர்த்தி இருவரும் திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்தனர். தொடர்ந்து இவர்களது விவாகரத்து வழக்குச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அண்மையில்தான் இவர்களது வழக்கில், ஆர்த்திக்கு மாதம் ரூ.3 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு, மகன்களைப் பார்க்கவும் அனுமதி வழங்கியிருந்தது. இது ஆர்த்திக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்ட நிலையில், இந்த பதிவு வெளியாகியிருக்கிறது.
Summary
Drive them away! Aarthi's Instagram post stirs up a storm.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயக்குநராகத்தான் ஆசைப்பட்டேன்: நடிகர் ரவி மோகன்

ப்ரோ கோட் திரைப்படத்தின் பெயர் ப்ரோ கிளப் ஆனது!

என் குடும்பத்தினர் எனக்குக் கொடுத்த உற்சாகம்: ரவி மோகன் நெகிழ்ச்சி!

மிஸ்டர் மனைவி தொடர் நாயகனை கரம் பிடிக்கும் ஆர்த்தி சுபாஷ்!
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp




