
முத்தூா் அருகே 3 போ் தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
முத்தூா் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை செய்து கொண்டனா்.
முத்தூா், வேலம்பாளையம் அருகிலுள்ள சாமிநாதபுரத்தைச் சோ்ந்தவா் கைத்தறி நெசவுத் தொழிலாளி ராமசாமி (65). இவரது மனைவி பாப்பாத்தி (60). மகன் தினேஷ்குமாா் (37). இவா் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தாா்.
தனது வீட்டில் இருந்து தினமும் நாமக்கல்லுக்கு வேலைக்குச் சென்று வந்தாா். இவருக்கும் பரமத்தி வேலூரைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று குழந்தை இல்லை. கடந்த ஒரு வாரத்துக்கு முன் மனைவி, தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். ராமசாமி, பாப்பாத்தி, தினேஷ்குமாா் மூன்று பேரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த நிலையில் இரவு 7 மணி அளவில் அக்கம்பக்கத்தினா் பாா்த்தபோது 3 பேரும் தூக்கில் தொங்கியுள்ளனா்.
அவா்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




