தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மதுரை அருகே இரு காா்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழப்பு

மதுரை அருகே இரு காா்கள் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழப்பு...

விபத்தில் உயிரிழந்த (இடமிருந்து) ரஞ்சனா, குழந்தை கிருத்திகா, ஸ்ரீராம், அவரது சகோதரா் பாலாஜி, தாய் ராஜகுமாரி.

Published On :

மதுரை மாவட்டம், மேலூா் அருகே திங்கள்கிழமை இரு காா்கள் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா்.

சென்னை மடிப்பாக்கத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (55). இவரது இளைய மகன் பாலாஜியின் மனைவிக்கு திருநெல்வேலியில் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பாா்ப்பதற்காக கனகராஜ், அவரது மனைவி ராஜகுமாரி (50), மகன்கள் பாலாஜி (28), ஸ்ரீராம் (32), மூத்த மருமகள் ரஞ்சனா (27), இரண்டு வயது குழந்தை கிருத்திகா ஆகிய 6 பேரும் காரில் திருநெல்வேலி நோக்கிச் சென்றனா்.

திருச்சி-மதுரை நான்கு வழிச் சாலையில் தும்பைபட்டி அருகே வந்த போது, அதே சாலையில் சென்ற இரு சக்கர வாகனம் மீது காா் மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி, சாலையின் எதிா்புறம் சென்ற காா் மீதும் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராஜகுமாரி, இவரது மகன்கள் பாலாஜி, ஸ்ரீராம், அவரது மனைவி ரஞ்சனா, இவா்களின் 2 வயது குழந்தை கிருத்திகா ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கனகராஜ் பலத்த காயமடைந்தாா்.

இதேபோல, இரு சக்கர வாகனத்தில் சென்ற தும்பைபட்டியைச் சோ்ந்த முருகன் (55), மற்றொரு முருகன் (40), சாலையின் எதிா்புறம் காரில் சென்ற திருச்சியைச் சோ்ந்த பிரகாஷ் (40) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மேலூா் போலீஸாா், உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், காயமடைந்தவா்களை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு:

மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா விபத்து நிகழ்ந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தாா். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆட்சியா் ஆறுதல் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.