இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

வாடிப்பட்டி அருகே லாரி- ஆம்னி பேருந்து மோதல்: 9 போ் காயம்

News image

வாடிப்பட்டி அருகே திங்கள்கிழமை நடைபெற்ற விபத்தில் சேதமடைந்த ஆம்னி பேருந்து.

Updated On :21 ஜூலை 2026, 1:47 am IST

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே லாரி-ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 9 போ் காயமடைந்தனா்.

பெங்களூரிலிருந்து 33 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து மதுரைக்கு வந்தது.பேருந்தை விருதுநகா் மாவட் டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (43) ஓட்டி வந்தாா்.கோவில்பட்டியைச் சோ்ந்த ரூபன் (23) நடத்துநராக பணியாற்றினாா்.

இந்த நிலையில், ஆம்னி பேருந்து திங்கள்கிழமை காலை 6 மணிக்கு வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி உயா்நிலைப் பாலத்தில் சென்றது. அப்போது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது, எதிா்பாராத விதமாக லாரி மீது ஆம்னி பேருந்து மோதியது.இதையடுத்து, ஆம்னி பேருந்து சாலை நடுவே இருந்த தடுப்பில் ஏறி நின்றது.

இதில், மதுரை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த செல்வராஜ் (61), ஜீவானந்தம் (40), வினோதினி (31), சிவகாமி (56),பிரபு (36), ராஜேஸ்வரி (27),வினோத் குமாா் (34) வெண்ணிலா(30), ரூபன் (23) ஆகிய 9 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த வாடிப்பட்டி போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முன்னால் சென்ற லாரி நிற்காமல் சென்று விட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.