சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி, 42 பேர் காயம்

மதுரை அருகே அரசு பேருந்தும்-ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினது தொடர்பாக...

News image

ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து

Updated On :13 ஜூலை 2026, 9:57 am IST

மதுரை: மதுரை அருகே அரசு பேருந்தும்-ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர். 42 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளது. பேருந்து மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வண்டிநகரம் பகுதி நான்குவழிச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பில் மோதி எதிர் திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாலையோரம் இடது புறத்தில் இருந்தவஞ்சிநகரம் பயணிகள் நிழற்குடையில் மோதி ஆம்னி பேருந்து முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. நிழற்குடை சேதமடைந்தது. அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில், இரண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 4 ஆண்கள், 1 பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 42 பேர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்வாய்ப்பாக, அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் நிழற்குடையில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

விபத்து குறித்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.