தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்!

தமிழக பட்ஜெட் தாக்கல் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதை அவைத் தலைவர் அறிவித்தார்.

News image

பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 11:49 am IST

ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று அறிவித்தார்.

தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் பதவியேற்று மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், 2026 - 27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும். ஆகஸ்ட் 6ஆம் தேதி தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

மேலும், பட்ஜெட் கூட்டத் தொடரை முழு நேரலை செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம் என்றும், பட்ஜெட் கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும் என்றார்.

எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எம்எல்ஏக்களை கைது செய்ய அவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை. எம்எல்ஏ மார்க்கண்டேயனின் பேச்சு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏ கைது செய்யப்பட்டதும், அது குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எனக்குத் தெரிவித்திருந்தார். 24 மணி நேரத்துக்கும் மேல் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும் கூறியிருந்தார்.

அதுபோல, எம்எல்ஏக்களை கைது செய்ய அவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை. பேரவை அமைப்புக்குள் கைது செய்தால்தான் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறையையும் ஜேசிடி பிரபாகரன் படித்துக் காட்டினார்.

முதல்வர் விஜய் சைகை

பேரவைக்குள், முதல்வர் விஜய் கையை கழுத்துக்குக் கீழே அசைத்து சைகைக் காட்டியது விதிமீறல் இல்லையா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு முதல்வர் விஜய் சைகை காட்டியதில் எந்த விதிமீறலும் இல்லை. அவர் என்னிடம் அனுமதி பெற்றே சைகை காட்டினார் என்றார்.

அதுபோல எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் சைகை காட்டலாமா என்று செய்திளார்கள் கேட்டதற்கு, சைகை செய்வதற்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என்னிடம் முன் அனுமதி பெற வேண்டும். எந்த விதமான சைகை செய்யப் போகிறார்கள் என்று சொல்ல வேண்டும் என்றார்.

இதற்கு, முன்கூட்டியே விஜய் எந்தவிதமான சைகை காட்டப் போகிறேன் என்பதை சொல்லிவிட்டுத்தான் செய்தாரா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு விஜய் கையை வைத்திருந்ததைப் பார்த்தே அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று பதிலளித்தார் அவைத் தலைவர்.

அதுபோல, எதிர்க்கட்சியினர் சைகை காட்ட வேண்டும் என்றால் என்னிடம் முன் அனுமதி பெறவேண்டும். அவர்கள் எந்த சைகை செய்யப்போகிறார் என்று சொன்னால் அதற்கேற்ப அனுமதி வழங்கப்படும் என்றார்.

முதல்வர் விஜய் சொன்னது போல பேரவைக் கதவுகள் பூட்டப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதல்வர் விஜய் சொன்னதின் அர்த்தம் என்ன என்றுதான் பார்க்க வேண்டும், அவர் சொன்னதை அப்படியே எடுத்துக் கொண்டு கேள்வி எழுப்பக் கூடாது என்று அவைத் தலைவர் பதிலளித்தார்.

அதாவது, பேரவையில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு பதில் சொல்லும்போது, அதற்காகக் காத்திராமல் பேரவையில் இருந்து வெளியேறுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

கேள்வி கேட்டு பதில் சொல்வதை கேட்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் கதவை பூட்ட வேண்டும் என்று முதல்வர் சொன்னாரே தவிர, கதவை பூட்ட வேண்டும் என்பதையே அர்த்தமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குறை கூறியவர்கள் நிறைவாக பதில் சொல்லும்போது அதனை கேட்க வேண்டும் என்று அர்த்தம். கதவை பூட்ட வேண்டும் என்று அர்த்தமாகாது என அவைத் தலைவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Summary

When will the Tamil Nadu budget be presented? The Speaker announced the dates!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.