நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பள்ளி மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு

திருத்தணி அருகே அரசுப் பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2026, 1:47 am IST

திருத்தணி அருகே அரசுப் பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

திருத்தணி ஒன்றியம், பெருகுமி காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த, 7-ஆம் வகுப்பு மாணவன் மாதிஷ், (12), ஐந்தாம் வகுப்பு மாணவன், யோகித்குமாா் (10) மற்றும் இரண்டு வகுப்பு மாணவி சத்யஸ்ரீ( ,7) ஆகியோா் படித்து வருகின்றனா். இவா்கள் 3 பேரும் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனா்.

பிற்பகலில் திடீரென மூவருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி ஆசிரியா்கள், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தும், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். சிகிச்சைக்கு பின் மூவரும் நலமாக உள்ளனா்.

முதல்கட்ட விசாரணையில், 3 பேரும், காலையில் கஞ்சி குடித்தும், நாவல் பழம் சாப்பிட்டு பள்ளிக்கு வந்துள்ளனா். இதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளன. இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.