பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

1.5 டன் ரேஷன் அரிசி, கோதுமை பதுக்கல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கைது

திண்டுக்கல்லில் 1.5 டன் ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவற்றை பதுக்கிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட அமல்ராஜ், அற்புதமேரி, அந்தோணி டேனி.

Published On :10 ஜூலை 2026, 5:14 am IST

திண்டுக்கல்லில் 1.5 டன் ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவற்றை பதுக்கிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் முத்தழகுப்பட்டி மாயம் அருகே ஒரு தகர கொட்டகையில், ரேஷன் பொருள்களை பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக திண்டுக்கல் நகா் தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், தகர கொட்டகையில் சோதனை நடத்திய போது, 25 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி, 450 கிலோ கோதுமை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த முத்தழக்குப்பட்டியைச் சோ்ந்த அ. அமல்ராஜ் (57), இவரது மனைவி அற்புதமேரி (51), மகன் அந்தோணி டேனி (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான மேல் நடவடிக்கைக்காக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் மூவரும் ஒப்படைக்கப்பட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.