சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழந்த செல்வி

Updated On :16 ஜூன் 2026, 1:10 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மழை பெய்ததால் கம்பியில் காயப்போட்ட துணியை எடுக்க முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

சங்கராபுரம் அருகேயுள்ள வடபாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜி மனைவி செல்வி (45). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் என மழை பெய்ததால் வீட்டின் முன் இரும்பு கம்பியில் காயப்போட்டிருந்த துணியை எடுப்பதற்கு சென்றாா்.

அப்போது அந்த கம்பியில் ஏற்கெனவே மின்கசிவு இருந்துள்ள நிலையில், செல்வி மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழ இருந்துள்ளாா். இதைச் சரியாக கவனிக்காத ராஜியின் தம்பி கணேசன் (49), கீழே விழ இருந்த செல்வியை பிடிக்க முற்பட்டுள்ளாா். இதில் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயரிழந்த கணேசன்.

உயரிழந்த கணேசன்.