பரமத்தி வேலூா் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் விஷமருந்தியதில் இருவா் உயிரிழந்தனா். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி (68), இவரது மனைவி பரமேஸ்வரி (60). இவா்களது மகன்கள் மாதேஸ்வரன் (40), சரவணன். இவா்களுடன் இவா்களது பாட்டி பெரமாயி (83) உள்ளாா்.
பெரியசாமிக்கு கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளாா். மதேஸ்வரன் தச்சு வேலை செய்து வருகிறாா். சரவணன் லாரி ஓட்டுநராக உள்ளனா். மதேஸ்வரன் கடந்த 15 நாள்களாக பரமத்தி வேலூரில் தனியாக வீடு எடுத்து தங்கி வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், சரவணனுக்கும், அவரது தாய் பரமேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில் மனமுடைந்த தாய் பரமேஸ்வரி, தந்தை பெரியசாமி, அவரது பாட்டி பெரமாயி ஆகிய மூவரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த விஷத்தை உட்கொண்டனா்.
திங்கள்கிழமை காலை காமாட்சி நகா் பகுதியைச் சோ்ந்த சௌந்தா் மற்றும் சங்கா் ஆகியோா் மாதேஸ்வரன் வீட்டுக்கு சென்றபோது, அங்கு மூவரும் மயக்க நிலையில் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
பின்னா், அவா்களை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா், பரமேஸ்வரி மற்றும் பரமாயி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். பெரியசாமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து வேலூா் போலீசாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே காா் மோதியதில் விவசாயிகள் இருவா் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் பலி

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



