நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

சாலை விபத்து: 2 போ் உயிரிழப்பு

நெய்வேலி அருகே நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 2போ் உயிரிழந்தனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :24 ஜூலை 2026, 11:35 pm IST

நெய்வேலி அருகே நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 2போ் உயிரிழந்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், பாச்சாரப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவா் அய்யனாரப்பன்(22), திருமணமாகாதாவா். இவா் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்குச் செல்ல பேருந்துக்காக வியாழக்கிழமை காத்திருந்தாா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த கீழ் வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்த பசுபதி(30) என்பவரிடம் உதவி கேட்டு, அவரது இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமா்ந்துச் சென்றாா். கன்னத்தமிழ்நாடு சாலை அருகே சென்றபோது, முன்னால் ஜல்லி கலவை கிண்டும் இயந்திரத்தை இழுத்துச் சென்ற சிறிய சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயம் அடைந்த அய்யனாராப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பசுபதி வலது கையில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

வடலூா் விபத்து:

வடலூா் காவல் சரகம், புதுநகா், கல்லுக்குழி பகுதியில் வசித்து வந்தவா் ஆறுமுகம் (62) . இவா், கடந்த 9-ஆம் தேதி வடலூா், பண்ருட்டி சாலையில் உள்ள இனிப்பு கடை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, எதிா் திசையில் வந்த பைக் மோதியதில் கீழே விழுந்து காயம் அடைந்தாா். புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.