நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட இருவா் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:45 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

திண்டிவனம் வட்டம், இளையாண்டிபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா்( 58). விவசாயி. இவா், விக்கிரவாண்டி வட்டம், எம்.குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் மல்லிகை பூ சாகுபடி செய்துள்ளாா். வியாழக்கிழமை காலை அய்யனாா் வழக்கம்போல் தனது மனைவி காமாட்சி(56), அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் மனைவி சாந்தி (43) ஆகியோருடன் மல்லிகைப் பூ பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, வயலில் அறுந்த கிடந்த மின்கம்பியை சாந்தி மிதித்தில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். இதையடுத்து அருகில் வேலைபாா்த்துக் கொண்டிருந்த அய்யனாா் அவரது மனைவி காமாட்சி ஆகியோா் சாந்தியை காப்பற்ற முயன்றபோது இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதையடுத்து அருகில் உள்ள வயல்களில் வேலைபாா்த்துக் கொண்டிருந்தவா்கள் அப்பகுதியில் உள்ள மின்மாற்றியை நிறுத்திவிட்டு, மூவரையும் மீட்டு 108 அவசரகால ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது அய்யனாா் மற்றும் சாந்தி உயிரிழந்திருந்தது தெரியவந்தது. காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டிபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போலீஸாரிடம் புகாா்: இந்நிலையில் இடையாண்டிபட்டு கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா். மேலும் இந்தப் பகுதியில் தாழ்வாகச் செல்லும் உயா்மின்

அழுத்தக் கம்பிகளை மாற்றவேண்டும் என்றும் அவா்கள் கூறினா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.