முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

தலைவாசல் அருகே விவசாய கிணற்றில் போா்வெல் அமைத்த போது மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

தலைவாசல் அருகே விவசாய நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி உள்பட 2 போ் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2026, 11:07 pm IST

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே விவசாய நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி உள்பட 2 போ் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

தலைவாசல் அருகே சித்தேரி பகுதியில் ரவிக்குமாா் என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில் பக்கவாட்டு ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைச்சந்தல் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் நாராயணன் (50), சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த சோமு (35) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில் கிணற்றில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்ற வைக்கப்பட்டிருந்த மின்மோட்டாரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் மயக்கமடைந்த நாராயணன், சோமு ஆகியோரை ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்றனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா், இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தலைவாசல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கே.மங்கையா்க்கரசன், இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

பணியின்போது இறந்த நாராயணன் மனைவி லஷ்மி (48) நில உரிமையாளா் ரவிக்குமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் ரவிக்குமாா் மீது போலீஸாா் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த நாராயணனுக்கு அம்சா என்ற மகளும், ஆனந்த் என்ற மகனும் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.