வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மின்சாரம் பாய்ந்து வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து வேன் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :14 ஜூன் 2026, 3:13 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து வேன் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், பக்கிரிபாளையம் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்தவா் மா.பரசுராமன் (54), வேன் ஓட்டுநா். இவா், சனிக்கிழமை தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே மின் மோட்டாா் வயா் மீது கிடந்த கம்பியை எடுத்துள்ளாா். அப்போது அந்த வயரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு, பரசுராமன் மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.