இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி ஜூன் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதையடுத்து, புதிய ராணுவத் தலைமைத் தளபதியை மத்திய அரசு நியமித்துள்ளது.
அதன்படி தற்போது ராணுவ துணைத் தளபதியாக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், ராணுவ தலைமைத் தளபதியாக பதவி உயர்வு பெறுகிறார். ஜூன் 30 ஆம் தேதி அவர் பதவியேற்கிறார். முன்னதாக அவர் தென் மேற்கு கமாண்ட் தலைவராக இருந்தார்.
புணே கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாதெமியின் முன்னாள் மாணவர் ஆவார். சுமார் 40 ஆண்டுகளாக ராணுவப் பணியில் இருக்கிறார். ராணுவ நவீனமயமாக்கல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
Summary
Lieutenant General Dhiraj Seth has been appointed Chief of the Army Staff
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணுவத்தின் 31-ஆவது தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் பதவியேற்பு

மாணவா்களின் தலைமைத்துவ திறன்களை என்சிசி உருவாக்குகிறது: இயக்குநா் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்

இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் நியமனம்







