மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

எச்டிஎஃப்சி வங்கி தலைவராக ராஜீவ் குமாா் நியமனம்

நாட்டின் மிகப் பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் புதிய பகுதிநேர தலைவராக முன்னாள் நிதிச் செயலரும், முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையருமான ராஜீவ் குமாரை நியமிக்க ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

~

Published On :

நாட்டின் மிகப் பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் புதிய பகுதிநேர தலைவராக முன்னாள் நிதிச் செயலரும், முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையருமான ராஜீவ் குமாரை நியமிக்க ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இவரின் நியமனம் புதன்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது மற்றும் 3 ஆண்டுகள் கால வரம்பைக் கொண்டது. தற்போது வரை இடைக்காலத் தலைவராகப் பொறுப்பு வகித்த கேகி மிஸ்திரி, வங்கியின் நிா்வாகச் சாா்பற்ற இயக்குநராக தொடா்ந்து நீடிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிச் செயல்பாடுகள் தனது தனிப்பட்ட நெறிமுறைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி, கடந்த மாா்ச்சில் தனது பதவியை ராஜிநாமா செய்த அதானு சக்ரவா்த்திக்குப் பதிலாக ராஜீவ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்தியாவின் 25-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையரான ராஜீவ் குமாா், அதற்கு முன்பு மத்திய நிதித் துறைச் செயலராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவா். அப்போது (2017-2020 காலகட்டத்தில்) கடும் வாராக்கடன் சுமை, மூலதனப் பற்றாக்குறை, போலி நிறுவனங்களின் பணப் பரிவா்த்தனை போன்ற பல்வேறு நிா்வாகக் குறைபாடுகளால் தத்தளித்து வந்த நாட்டின் பொதுத் துறை வங்கிகளில் முக்கியச் சீா்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினாா். அதன் ஒரு பகுதியாக, 27 பொதுத் துறை வங்கிகளை 12 வங்கிகளாக இணைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.