உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

பெரியபாளையம் அருகே ஆட்டோ - லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

பெரியபாளையம் அருகே ஆட்டோ - லாரி மோதி விபத்துள்ளானது தொடர்பாக...

accident

குப்புற கவிழ்ந்த ஆட்டோ - படம்: தினமணி

Published On :11 வினாடிகள் முன்பு

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே முன்னாள் சென்ற லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான நிலையில், பலத்த காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை அடுத்த கொடுங்கையூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் (42), மனைவி பூங்கொடி( 39), மகள் தனலட்சுமி (10), மாமியார் ராதா (65), மைத்துனர் மகன்கள் கோகுல்(10), பிரசாந்த் (15 ) ஆகியோர் நேற்று இரவு பெரியபாளையம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய, ஒரே ஆட்டோவில் சனிக்கிழமை நள்ளிரவில் வந்துள்ளனர்.

அப்போது, லோகநாதன் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்தபோது, பன்பாக்கம் அருகே உள்ள மாநகரப் பேருந்து நிறுத்தம் அருகே, முன்னாள் சென்ற லாரி மீது ஆட்டோ மோதி குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மனைவி பூங்கொடி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு அருகே உள்ள பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாமியார் ராதா, மைத்துனர் மகன் கோகுல் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பலியாகினர். மேலும் விபத்தில் பலத்த காயம் அடைந்த 3 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், விபத்தில் பலியான 3 பேரின் சடலங்களை கைப்பற்றிய பெரியபாளையம் காவல் நிலைய போலீஸார் உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து, பெரியபாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். பெரியபாளையம் கோயிலுக்கு வழிபாட்டிற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Three members of the same family died when their auto-rickshaw collided with a lorry ahead of them near Periyapalayam; three others sustained severe injuries and have been admitted to the hospital, where they are undergoing intensive treatment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.