FOLLOW US

ON GOOGLE DISCOVER

கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

உ.பி.யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு!

உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

கோப்புப்படம்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 5:46 pm IST

உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள வீட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சடலங்களாக வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலைகளுக்கான காரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் கூறுகையில், ஜோஹ்னா கிராமத்தில் உள்ள வீடொன்றில், பஜ்ரங் கிரி (28), அவரது மனைவி கோமல் (25), அவர்களின் மகள் ஷ்ரத்தா (3) மற்றும் ஒரு வயது மகன் ஜெய்தீப் ஆகியோரின் இரத்த வெள்ளத்திலான உடல்கள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டனர்.

உடல்கூறாய்வு செய்வதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா எவ்வாறு அணைக்கப்பட்டது.

பின்னர் இச்சம்பவத்திற்குப் பிறகு அது எவ்வாறு மீண்டும் இயங்கத் தொடங்கியது என்பது குறித்து காவல் துறை ஆய்வு செய்து வருகிறது.

பஜ்ரங் கிரியின் சகோதரரால் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்று நாட்டுத் துப்பாக்கிகளும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் நடந்த அறையிலிருந்து இரத்தக் கறை படிந்த கத்தரிக்கோல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், பலியானவரின் சகோதரர் வழங்கிய கைப்பேசியில் உள்ள சில தகவல்கள் தற்கொலைக்கான சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டுவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்துள்ளனர்.

புலனாய்வாளர்கள் அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விரைவில் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

Summary

Four members of a family, including two young children, were found dead with gunshot injuries at their house in Balrampur, with police investigating multiple angles to ascertain the circumstances surrounding the killings, an official said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.