விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நெடுஞ்சாலையோர தடுப்புக் கட்டையில் கார் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம், கொசவன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சக்தி (எ) ஸ்ரீதரன் (21), சா. வெற்றிவேல் (25), தரணிவேல் மனைவி சுஜாதா (51), ஆனந்தன் மனைவி ஹேமலதா (53), மதுரை ஜெயிலர் குடியிருப்பைச் சேர்ந்த ஸ்ரீதாரணி (21), மண்டபம் கேம்ப் பகுதியைச் சேர்ந்த ராணி(73).
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் 6 பேரும் ஹேமலதாவின் மகன் ஹரிஷை சென்னை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் ராமநாதபுரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். சக்தி (எ) ஸ்ரீதரன் காரை ஓட்டினார்.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் மையப்பகுதியில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், காரின் இடிபாடிகளில் சிக்கிய 6 பேரும் காயமடைந்தனர். வெற்றிவேல் நிகழ்விடத்திலேயே பலியானார். சக்தி (எ) ஸ்ரீதரன், சுஜாதா ஆகியோர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியாகினர். ஹேமலதா, ஸ்ரீதாரணி, ராணி ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து, உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ஓட்டுநர் தூக்கக்கலக்கத்தில் காரை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Summary
Three members of the same family were killed when their car crashed into a highway median near Ulundurpet in Kallakurichi district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

தில்லி கோவிந்த்புரி கட்டடத் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு: இருவா் படுகாயம்







